Monday, July 11, 2016

விண்டோஸில் வால் பேப்பர்களை அழிப்பது எப்படி?

தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.
அதிகமாகப் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் முதலிடத்தில் இருப்பது விண்டோஸ் இயங்குதளங்கள் தான்.  அதில் Default ஆக வரும் வால் பேப்பர்கள், மற்றும் நாம் செட் செய்த வால் பேப்பர்கள் பிறகு நமக்கு பிடிக்காமல் போகலாம். அதற்க்காக பிடித்தமான வால் பேப்பர்களை மாற்றிக்கொண்டே இருப்போம்.  ஆனால் வால் பேப்பர் மாற்றும் போது நாம் முன்பே உபயோகபடுத்திய வால் பேப்பர் அழிவதில்லை.  அது குப்பைகளாக ந‌ம் கணினியில் தங்கிவிடும்.  அதை அழிப்பதற்க்கான வழி இதோ.



My Computer சென்று Local Disk (C:) ==> Windows ==> Web ==> Wallpaper


என்ற‌ Folder' ல் நீங்கள் உபயோகப்படுதிய அனைத்து வால் பேப்பர்களும் இருக்கும்.  தேவை இல்லாதவற்றை ( Shift+Delete-Enter ) அழுத்தி அழித்து விடுங்கள்.  நன்றி...

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்

3 டக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படம் வரைவதற்காக உதவும்.1
ஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும்.
2
இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும்.
3
கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன (Periodical table) அட்டவணை
மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம்.
4
கிம்ப் (GIMP அல்லது GNU Image Manipulation Program) என்பது ‘அடோப் ஃபோட்டோஷாப்’ மென்பொருளுக்கு நிகராக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும்.
5

Thursday, June 30, 2016

இலகுவாக USB மூலம் Bootable செய்து கொள்ள...! புதிதாக அறிமுகமாகி உள்ள Application..!

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு Pendriver மூலம் உங்களுடைய கணினியினை Format செய்வது எவ்வாறு என்றுதான். அதை எவ்வாறு என்று நான் உங்களுக்கு கூறுகின்றேன். இது பெரும்பாலான நண்பர்களுக்கு இது பழைய விஷயமாக இருக்கலாம் ஆனால் இது சிலருக்கு புதியது.

முதலில் உங்களுக்கு தேவையானவை.

ஒரு PenDriver
விண்டோஸ் OS ( iSO வடிவில் )
Format செய்ய இருக்கும் கணினி.

முதலில் இந்த அப்ப்ளிகாடின் Download செய்து கொள்ளுங்கள். இந்த Application மூலம் தான் உங்களுடைய Pendriver Bootable 'லாக மற்றும் Application.


                                       


அதன் பின்னர் உங்களுடைய விண்டோஸ் ISO File Download அல்லது Desktop எடுத்து வைத்து கொள்ளுங்கள். ISO file டவுன்லோட் செய்து கொள்ள.





அதன் பின்னர் உங்களுடைய கணினியில் Pendriver நிறுவிக்கொள்ளுங்கள். இப்போது Download செய்த Rufe Application Open செய்து கொள்ளுங்கள்.


                                  


மேலே உள்ளது போல உங்களுடைய Rufe Application செய்து கொள்ளுஞ்கள். அதன் பின்னர் உங்களுடைய ISO File Select செய்து கொள்ளுங்கள்





அவ்வளவுதான் உங்களுடைய ISO File Select பண்ணிட்டு Start பண்ணினால் சரி அவ்வளவுதான்.


                                   



இதன் பின்னர் நீங்கள் CD போட்டு Format செய்யாமல் உங்களுடைய Pendriver மூலம் Format செய்து கொள்ள முடியும்.

எந்த ஒரு மொபைல் சாதனத்தையும் Hard Reset செய்வது எப்படி?

  • உங்கள் மொபைல் சாதனம் உங்களை கடுப்பேற்றும் வகையில் மிகவும் மந்த கதியில் இயங்குகின்றதா? அல்லது அடிக்கடி உறைந்து  (Stuck) உங்கள் பொறுமையை சோதிக்கிறதா?
  • அல்லது மொபைல் சாதனத்தின் கடவுச்சொல்லை அண்மையில் மாற்றியதால் அதன் கடவுச்சொல் மறந்து விட்டதா? 
  • உங்கள் Android சாதனத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் நீக்கி அதனை புதிய சாதனத்தை போல் மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா?
  • உங்கள் Mobile சாதனத்தில் உள்ள உங்களது அனைத்து தரவுகளையும் நீக்கி விட்டு அதனை இன்னுமொருவருக்கு கைமாற்ற உள்ளீர்களா?
     
  • உங்கள் வீட்டிலுள்ள சின்னஞ் சிறுசுகள் உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள Pattern Lock ஐ விளையாட்டு பொருளாக பயன்படுத்தியதால் அது மீண்டும் இயங்க மறுக்கின்றதா?

இது போன்ற இன்னும் பல்வேறு இக்கட்டான சந்தர்பங்களில் எமக்கு கை கொடுத்து உதவுகின்றது மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ள Hard Reset எனும் வசதி.


மொபைலில் Hard Reset இணையதளம்


மொபைல் சாதனங்களை Hard Reset செய்வதன் மூலம் அவற்றில் இருக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் முற்றிலுமாக நீக்கிக் கொள்ள முடிவதுடன் நீங்கள் உங்கள் மொபைல் சாதனத்துக்கு இட்டிருந்த கடவுச்சொற்கள் (Password), அமைப்பில் (Settings) ஏற்படுத்தி இருந்த மாற்றங்கள் என அனைத்தையும் நீக்கி உங்கள் மொபைல் சாதனம் புதிதாக வாங்கும் போது எவ்வாறு இருந்ததோ அந்த நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


எனினும் மொபைல் சாதனங்களை Hard Reset செய்யும் முறையானது மொபைல் சாதனத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு நிறுவனமும்  சாதனத்துக்கு சாதனமும் வேறுபடுகின்றது. எனவே உங்கள் மொபைல் சாதனத்தை எவ்வாறு Hard Reset செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு கேள்விக் குறியாகவே உள்ளதா?

How to Hard reset my mobile phone


கவலை வேண்டாம்..! நீங்கள் பயன்படுத்துவது எந்த ஒரு மொபைல் சாதனமாக இருப்பினும் சரி உங்கள் மொபைல் சாதனத்தை எவ்வாறு Hard Reset செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறையை உங்களுக்கு கற்றுத்தருகின்றது Hardreset எனும் இணையதளம்.

6500 இற்கும் மேற்பட்ட மொபைல் சாதனங்களுக்கான Hard Reset செய்யும் வழிமுறைய அறிந்து கொள்ள உதவும் இந்த தளமானது அவற்றினை எந்த ஒரு தரப்பினராலும் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் படத்துடன் கூடிய விளக்கத்தை தருவதுடன் அவற்றுக்கான வீடியோ விளக்கத்தையும் கொண்டுள்ளது.

இந்த தளத்துக்குச் சென்று இந்த தளத்தில் தரப்பட்டுள்ள Search Box இல் உங்கள் மொபைல் சாதனத்தின் பெயரை தட்டச்சு செய்து தேடுவதன் மூலமோ அல்லது A-Z தரப்பட்டுள்ள பட்டியலின் மூலமோ உங்கள் மொபைல் சாதனத்தை தெரிவு செய்த பின் அதனை Reset செய்வதற்கான வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

Samsung, Sony, Nokia, HTC, LG, Blackberry, Huawei, Motorola, Vodafone, Lenovo, Oppo, Panasonic, Philips, Xolo, Xiaomi  என இன்னும் ஏராளமான நிறுவனங்களின் மொபைல் சாதனங்கள் இந்த தளத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.


மொபைல் Hard rest செய்தல்


இவற்றிற்கு மேலாக உங்கள் மொபைல் சாதனம் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற்கான குறியீடுகளும் (Codes) இந்த தளத்தில் தரப்பட்டுள்ளமையானது இன்னும் இனிப்பான விடயம் அல்லவா?

குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல கீழுள்ள இணைப்பை சுட்டுக.



ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள உதவிக்குறிப்புகள்

பேஸ்புக் தளமானது உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் மிகப்பெரியதொரு சமூக வலைத்தளமாகும். இதனை கணினி மூலம் பயன்டுத்துபவர்களை விட ஸ்மார்ட் போன்கள் மூலம் பயன்படுத்துபவர்களே இன்று அதிகம்.

அந்த வகையில் இன்று பேஸ்புக் செயலி நிறுவப்படாத ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என்றே கூற வேண்டும். அத்துடன் பெரும்பாலான மொபைல் சாதனங்களை புதிதாக வாங்கும் போதே அதில் பேஸ்புக் செயலி நிறுவப்பட்டிருக்கின்றன.

எது எப்படியோ சமூக வலைதளத்தில் பேஸ்புக் போல மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டு என்றே கூற வேண்டும். இதனடிப்படையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை வலம் வரும் பயனர்களே ஏராளம்.

எனவே நீங்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையலாம்.


10. எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களில் பகிர்ந்து கொள்ள 

பொதுவாக பேஸ்புக் தளத்தில் எண்கள் எழுத்துக்கள் குறியீடுகளைக் கொண்டு எமது நிலைத் தகவல்களை பகிந்துகொள்ள முடிந்தாலும் நாம் அதில் தட்டச்சு எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களுக்கு மாற்ற முடிவதில்லை எனினும் Fsymbols எனும் இணையதளமானது நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை பல அட்டகாசமான தோற்றங்களுக்கு மாற்றித்தருகிறது. பின் அவற்றை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை சுற்று வட்டமிடப்பட்டதாகவும், தலைகீழாகவும், வலம் இருந்து இடமாகவும் என பல அருமையான தோற்றங்களுக்கு மாற்றிப்பெற்றுக்கொள்ள முடியும்.


9. நண்பர்களின் இற்றைபடுத்தல்களை அறிய பேஸ்புக் விட்ஜெட் வசதியை பயன்படுத்தலாமே 

ஆண்ட்ராய்டு பேஸ்புக் விட்ஜெட்


எமது ஸ்மார்ட் போனுக்கு நாம் செயலிகளை நிறுவும் போது பெரும்பாலான செயலிகள் அவற்றுக்கான விட்ஜெட்டை வசதியுடன் நிறுவப்படுகின்றன. இவற்றின் மூலம் குறிப்பிட்ட செயலியில் உள்ள வசதிகளை ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே மிக இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்.

அதே போல் பேஸ்புக் செயலிக்கான விட்ஜெட் வசதியை உங்கள் ஸ்மார்ட் போனின் ஹோம் ஸ்க்ரீன் பகுதியில் இணைத்துக் கொள்வதன் மூலம் ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே உங்கள் நண்பர்களின் இடுகைகளை கண்காணிக்கலாம்.

விட்ஜெட்டை இணைக்கும் முறையானது சாதனத்துக்கு சாதனம் வேறுபடலாம் இருப்பினும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் அதன் ஹோம் ஸ்க்ரீனை தொடர்ச்சியாக சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் விட்ஜெட்களை இணைப்பதற்கான வசதியை பெறலாம்.


8. நோட்டிபிகேஷகளை நிர்வகிக்க 

பேஸ்புக் தளத்தில் எமக்கு புதியதொரு செய்தி (Message) வரும் போதும், புதிய நண்பர்களின் கோரிக்கை வரும் போதும், புகைப்படங்களில் நாம் Tag செய்யப்படும் போதும் என இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் எமது பேஸ்புக் கணக்கில் நிகழும் பல்வேறு மாற்றங்களை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் செயலியில் நோட்டிபிகேஷன் வசதி தரப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷன்


இது ஒரு சிறந்த வசதியாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான நோட்டிபிகேஷன்கள் வரும் போது அதுவே எமக்கு தொந்தரவாகவும் அமைந்துவிடுவதுண்டு.

எனவே எமது பேஸ்புக் கணக்கில் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்களுக்கு மாத்திரம் நோட்டிபிகேஷன்கள் தோன்றும் வகையில் பேஸ்புக் செயலியை அமைத்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தோன்றும் மூன்று கோடுகளாலான மெனு பட்டனை சுட்டும் போது தோன்றும் App Settings ===> Notification எனும் பகுதி மூலம் மேற்குறிப்பிட்ட செயற்பாட்டை மேற்கொள்ளலாம்.


7. அருகிலுள்ள நண்பர்களையும் இடங்களையும் அறிய 

அத்துடன் கணினியின் மூலம் பெறமுடியாத ஆனால் ஸ்மார்ட் போன்கள் மூலம் பெற முடிகின்ற ஒரு வசதியே Nearby Places மற்றும் Nearby Friends என்பதாகும். நீங்கள் உலகின் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும் உங்களுக்கு அருகில் இருக்கும் விடுதிகள், உணவகங்கள், விற்பனை நிலையங்கள் போன்ற இன்னும் பல இடங்களையும் Nearby Friends என்பதன் மூலம் உங்களுக்கு அருகில் இருக்கும் உங்களது முகநூல் நண்பர்களையும் அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Nearby Places மற்றும் Nearby Friends என்பவற்றை சுட்டுவதன் மூலம் மேற்குறிப்பிட்ட வசதிகளை பெறலாம்.


6. தானாக இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை தடுக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய வீடியோ கோப்புக்கள் தானாகவே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எமது பேஸ்புக் பக்கத்தில் தோன்றக்கூடிய அனைத்து வீடியோ கோப்புக்களும் தானாக இயங்குவதால் தேவையற்ற விதத்தில் எமது தரவுப்பாவனை அதிகரிக்கின்றது.



எனவே இதனை தவிர்த்துக்கொள்ள Video Auto Play வசதியை நிறுத்திக் கொள்ளலாம். இதனை மேற்கொள்ள நாம் மேலே குறிப்பிட்ட வகையில் App Settings பகுதிக்கு சென்று அதில் தரப்பட்டிருக்கும் Auto Play என்பதை சுட்டுக. பின் Never Auto Play Video என்பதை தெரிவு செய்வதன் மூலம் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்குவதை தடுக்கலாம்.


5. பதிவுகளை சேமிக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், இணைய இணைப்புகள் போன்றவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்ப்பதற்காக அதனை சேமித்து வைக்க முடியும்.

இதனை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட பதிவின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள அம்புக்குறி அடையாளத்தை சுட்டும் போது பெறப்படும் சாளரத்தில் Save Video அல்லது Save Link எனும் பட்டனை சுட்டுவதன் மூலம் அவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்த்துக் கொள்ளும் வகையிலும் சேமித்துக் கொள்ளலாம்.

சேமிக்கப்பட்டவற்றை பெற்றுக்கொள்ள மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Saved என்பதை சுட்ட வேண்டும்.


4. வேண்டாமே கவலை:

உங்கள் பேஸ்புக் கணக்கை இன்னும் ஒருவர் உபயோகப்படுத்துவதாக உணர்கிறீர்களா? 

இதற்கு பெரும்பாலும் எமது கவனயீனமே ஒரு காரணமாக அமைந்துவிடலாம். நாம் பொது இடங்களில் இருக்கும் கணினிகளிலோ அல்லது நண்பர்களின் ஸ்மார்ட் போன்கள் மூலமாகவோ எமது முகநூல் கணக்கை பயன்படுத்தி விட்டு அதனை Logout செய்ய மறந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதுண்டு.

இருப்பினும் இதற்கு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Account settings ===> Security ===> Active Sessions எனும் பகுதி மூலம் நாம் Logout செய்ய மறந்த சாதனங்களில் இருந்து எமது பேஸ்புக் கணக்கை Logout செய்துகொள்ள முடியும்.



3. நண்பர் தான் ஆனால் பதிவுகள் வேண்டாம்:

முகநூலில் இருக்கும் நண்பர் ஒருவர் பகிரக்கூடிய தகவல்கள் உங்களுக்கு பிடிக்கவில்லைய? எனவே அவரது பதிவுகள் உங்களுக்கு தோன்றாமல் இருக்க அவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு பதிலாக அவரை Unfollow செய்யலாம். இதன் போது அவர் தொடர்ச்சியாக எமது நண்பர் பட்டியலில் இருந்தாலும் அவர் பகிரக்கூடிய தகவல்கள் எமக்கு தோன்ற மாட்டாது.




இதனை மேற்கொள்ள குறிப்பிட்ட நண்பரின் சுயவிவர (Profile) பகுதிக்குச் சென்று Following என்பதை சுட்டுவதன் மூலம் Unfollow என்பதை தெரிவு செய்ய வேண்டியது தான்.


2. பதிவுகளை தவறாமல் பார்க்க வேண்டுமெனில்:

மேலே குறிப்பிட்ட முறைக்கு மாறாக ஒரு நண்பரின் அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளை தவறாமல் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதற்கும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனை மேற்கொள்ள வேண்டுமெனில் குறிப்பிட்ட நண்பரின் அல்லது முகநூல் பக்கத்தின் Profile பகுதிக்கு சென்று  Following என்பதை சுட்டும்போது பெறப்படும் சாளரத்தில் See First என்பதை அழுத்த வேண்டும்.



1. அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள:

நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை அரட்டைக்கான பகுதியில் (Chatting Window) Pin செய்துகொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் Pin செய்யும் நண்பர்களின் பெயர்கள் அரட்டைக்கான சாளரத்தின் மேற்பகுதியில் தோன்றும். 

எனவே அரட்டையில் ஈடுபடவேண்டிய ஒவ்வொரு சந்தர்பங்களிலும் உங்கள் நண்பர் பட்டியலில் இருந்து அவர்களை தேடிப்பெற வேண்டிய அவசியம் இருக்காது.



பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள நண்பர்களை அடையாளப்படுத்தும் குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் நண்பர்களின் பட்டியலை பெறலாம்.

பின் அதில் தரப்பட்டுள்ள EDIT என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள முடியும்.

Monday, June 27, 2016

தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?



உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer காணப்படுகின்றது .

Team Viewer என்றால் என்ன?

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.

இதை தரவிறக்க இங்கே செல்லவும் >>Team Viewer 7.0
இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.

உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போதுவிண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.

இதில் இரண்டு வசதிகள் உள்ளன. இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய முடியும் . இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/ அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.

உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.

இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால்உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமேசெயல்பட வைக்க முடியும்.

இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவைஇல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.

இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?

முக்கியமாக இரண்டு கணினிகளிலும்Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக அவசியம்.

Download:  Team Viewer 

Whatsapp Message வாட்ஸ்அப் மெசேஜ்-களை பாதுகாக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய வசதி

ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான மெசஞ்சர் செயலியாக காணப்படும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்காக சிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.

அந்த வகையில் அண்மையில் வாட்ஸ்அப்-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தடித்த மற்றும் வளைந்த எழுத்துக்கள் மூலம் செட் செய்யும் வசதியை குறிப்பிடலாம். இந்த வசதியுடன் சேர்த்து, மேலும் பல்வேறு வசதிகளுடன் அண்மையில் வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகிய விடயங்களை பற்றி எமது தளத்தில் ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்டது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறியிருந்தால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகி இருக்கும் புதிய வசதிகள்

இவ்வாறு பயனுள்ள பல வசதிகளை அறிமுகப்படுத்தி வந்த வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது வாட்ஸ்அப் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட சிறந்ததொரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது வாட்ஸ்அப் என்க்ரிப்சன் எனப்படும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


( Encrypted  )என்க்ரிப்சன் என்றால் என்ன?

என்க்ரிப்சன் எனப்படுவது, நாம் குறித்த ஒருவருக்கு அனுப்பும் செய்தி வெறும் டெக்ஸ்ட் வடிவத்திலேயே செல்லாமல், இரகசிய குறியீடுகளாக மாற்றப்பட்டு அனுப்பப்படுவதாகும்.

ஆகவே குறித்த செய்தி ஒன்றை நாம் மற்றுமொருவருக்கு அனுப்பும் போது, அந்த செய்தி குறித்த நபரை சென்றடையும் வரை யாராலும் ஹேக் செய்து தெரிந்து கொள்ள முடியாது.

உதாரணமாக நாம் எமது வாட்ஸ்அப் மூலம் எமது நண்பர் ஒருவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பும் போது, குறித்த மெசேஜ்-ஐ நடுவில் இருந்து யாரேனும் ஹேக் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறித்த ஹேகர், எமது மெசேஜ்-ஐ ஹேக் செய்து விட்டால், நேரடியாக அவரால் எம்முடைய மெசேஜ்-ஐ வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் எமது மெசேஜ் என்க்ரிப்சன் செய்யப்படுவதால், எமது மெசேஜ்-ஐ யாரேனும் ஹேக் செய்தாலும் அவர்களால் குறித்த மெசேஜ் என்ன என்று வாசித்து தெரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால், எம்முடைய மெசேஜ் வெறும் எழுத்துகளாக இல்லாமல் சிறப்பு குறியீடுகளாக காணப்படுவதே இதற்கு காரணம் ஆகும்.
இந்த என்க்ரிப்சன் வசதியை தான், தற்போது வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆகவே இனி நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு வாட்ஸ்அப் மெசேஜ்-உம் சிறந்ததொரு பாதுகாப்பு முறை மூலம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதியை பெற்றுக்கொள்வது எப்படி?

இந்த வசதியை உங்களது வாட்ஸ்அப் கணக்கில் செயற்படுத்த, உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்திடுங்கள்.

அப்டேட் செய்ததும், உங்களுடைய வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று, அங்கே Account என்பதில் Security என்பதை தெரிவு செய்யுங்கள்.

.
இந்த மெனு-வில் உங்களது வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் அழைப்புக்களை (கால்) என்க்ரிப்ட் செய்வதற்கான வசதி காணப்படும்.

ஆகவே இனி நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்-உம் என்க்ரிப்ட் செய்யப்பட்டே அனுப்பப்படும்.

இதுவரை வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகி உள்ள வசதிகளில், இந்த புதிய வசதி மிக முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.