Tuesday, May 31, 2016

youtubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய

பல நண்பர்களுக்கு  youtube videoக்களை ss முறையில் டவுன்லோட் செய்யும் வழிமுறை தெரியாமலேயே இருக்கிறது

இதன் மூலம் youtube videoவை உங்களது   browserஇலோ அல்லது  download managerஐயோ கொண்டு எளிமையாக  download செய்துவிடலாம் அதை பற்றிய விபரங்களை பார்க்கலாம்

(நான்  opera mobileலில் இதனுடைய செயல் முறையை விளக்குகிறேன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான  browserல் இதை முயற்ச்சித்துப் பாருங்கள்)

முதலில் உங்களது  browserல் இருந்து  youtube. com சென்று அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும்   videoவை தேர்வு செய்யுங்கள்

(முதல் படத்தில் காட்டப்பட்டது நான் தேர்வு செய்தது )தேர்ந்தெடுத்ததும் இர்ண்டாவது படத்தில் காட்டப்பட்டதுபோல் அதனுடைய address barல் அந்த   videoவிற்கான  linkல் உதாரணமாக  m.youtube.com/watchஎன்பதாக இருக்கும் அதில்  m.ஐ நீக்கிவிட்டு  ss என்று சேர்த்துக்கொண்டு  (examble ssyoutube. com/watch search கொடுத்தால் வேலை முடிந்தது
அடுத்து வரும்  linkல் அந்த வீடியோவின் டவுன்லோட் லின்க் அதனுடைய  formatகள் வாரியாக உங்களுக்கு காண்பிக்கப்படும் அதி உங்களுக்கு தேவையான   formatகளில்  browserலேயோ அல்லது download managerஇலோ  download செய்துவிடலாம்
உபயோகமானது 
அனைவருக்கும் பகிருங்கள்

மொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை

Hang ஆவதை எப்படி சரி செய்வது ?

அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு 
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும் 
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால்  Applicationகளை   Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள் 
அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 
இது எனது போனில் இருக்கும் 41.26MB அளவுள்ள ஒரு Application இதை நான் இப்பொழுது மெமரிகார்டிற்கு Move செய்ய போகிறேன்






இந்த படத்தில் நீங்கல் கான்பது நான் மெமரி கார்டிற்கு அதை Move செய்தபின் இதனுடைய அளவின் விவரப்பட்டியல் 
Total அதே 41.26Mb 
USB storage app என்பது மெமரி கார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட fileகளின் அளவு 35.56MB 
சரி app 4.90MB என்று ஒரு பட்டியல் உள்ளதே அது என்ன அதுதான்  உங்களது போன் மெமரி  என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம் 






  • சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய  இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 




இது Settings>app >running பகுதியில் எனது மொபைலில் காண்பிக்கப்படும் Ram மெமரியின் உபயோக அளவு 
என்னுடைய Ram memoryன் அளவு 512Mb 
அதின் உபயோக அளவு 432மMb 
அதில் காலியான இடம் வெரும் 5 mb
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
  நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால்  கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின் அளவில் அதிக இடம் இருக்க வேண்டும் 
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop 


கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் இப்பொழுது என்னுடைய போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று


  • சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data 



அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் 



  • பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
  • HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் 
  •  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும் 

PLEASE SHARE THIS USEFUL INFORMATION TO YOUR FRIENDS

Wednesday, May 25, 2016

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க 

(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

உங்களது மெமரிகார்டில் உள்ள தேவை இல்லாத Fileகளை நீங்கள் கண்டறிந்து நீக்குவது கடினம் உதாரணமாக நீங்கள் உங்கள் மொபைலில் எதாவது ஒரு applicationஐ என்றாவது install செய்திருப்பீர்கள் அதை சிறிது நாள் கழித்து Uninstallம் செய்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் உபயோகித்த அந்த Applicationன் data Files (caches) அனைத்தும் உங்களது போன் மெமரியிலோ அல்லது மெமரிகார்டிலோ தங்கிவிடும் என்பது பலருக்கும் தெரியாது இதை நாமே கண்டறிந்து ஒவ்வொன்றாக அழிக்க முடியாது ஏனெனில் ஏதாவது முக்கியமான சில folderல் கை வைத்து விட்டால் சிக்கல் நமக்குத்தான்


ஆனால் இந்த SD Maid ( https://play.google.com/store/apps/details?id=eu.thedarken.sdm )இந்த வேலையை அருமையாக செய்கிறது
இதில் பலவகையான optionகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டாம் பிறகு உங்களுக்கு தேவையான photos மற்றும் Dataவினை தாங்கள் தெரியாமல் அழித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
ஆனால் இதில் இருக்கும் crop Finder(படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள படம் ) என்ற optionல் உபயோகப்படாத Applicationகளின் data filesஐ கண்டறிந்து அதை நீக்குவதற்கான அனுமதியை உங்களிடம் கேட்கும் நீங்கள் தேவை இல்லாததை மட்டும் select செய்து நீக்கிவிட்டால் வேலை முடிந்தது இதன் மூலம் தேவை இல்லாததை நீக்குவது மட்டுமல்லாமல் உங்களது போனின் வேகமும் அதிகரிக்கும்

Download Detail

available place - play store
cost - fully free !!!!!
No internet access 

Note :- கவனமுடன் செயல்படுங்கள் சந்தேகம் இருப்பின் Comment பன்னுங்க 

இசைப்பிரியர்களுக்கான இலவச மென்பொருள் - Media Monkey

மனிதகுலம் தோன்றியதிலிருந்து இன்று வரை எம்மிடமிருந்து பிரிக்க முடியாமலிருக்கின்ற விடயங்களில் இசை முதலிடத்தை பிடித்திருக்கின்றது என்று சொல்லலாம். அந்தளவுக்கு மொழி, இன, மத பேதமின்றி அனைவரையும் ஆட்கொண்டது இசை. அதிலும் தொழில்நுட்ப வளர்ச்சி இசைக்கு ஒரு மறுபிறப்பு என்று சொல்லுமளவுக்கு இசையினது வளர்ச்சியில் தொழில்நுட்பம் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறது, செலுத்துகின்றது. அன்றிருந்த நிலையும் இன்றிருக்கின்ற நிலையும் இசையை பிரசவிக்கின்ற இசைக் கருவிகள் தொடங்கி அதனை அனுபவிக்கின்ற சாதனங்கள் வரை ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எளிமையான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நூறு பேர் உட்கார்ந்து மீட்டுகின்ற இசைக்கு ஒரு கணினி பிரதியீடாகியிருக்கிறது, பாடல் கேட்க என்ற சாக்கில் எமது வீட்டின் பாரிய பரப்பை பிடித்திருந்த Gramophone காலம் கடந்து, உள்ளங்கைக்கும் ஓராயிரம் ஓசைகளை சுமக்க முடிகின்ற iPod கள் தோன்றியிருக்கின்றன. இதனால் எத்தனையோ பாடல்களை, இசைக் கோர்ப்புக்களை சுலபமாக சேமிக்க முடிவதுடன் காலம் கடந்து அவற்றைவாழ வைக்கவும் முடிகிறது.

இசை மனிதனுக்கு பொதுவான ரசனையானாலும் ஒரு சிலருக்கு இசையின் மீது தனிக் காதலே ஏற்படும், தமிழ் சினிமாவின் அன்று தொட்டு இன்று வரையான அனைத்து பாடல்களையும் சேர்த்து வைத்திருப்பார்கள், விடாமல் வாய் ஏதாவது பாடலை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கும் அதுமட்டுமல்லாது பாடல்கள் பற்றிய விபரங்கள் அதாவது இசையமைப்பாளர், பாடியவர், திரைப்படம், பாடல் வெளியான ஆண்டு என்று எல்லாமே அவர்கள் விரல் நுனியில் இருக்கும். அந்தளவுக்கு இசையின் தீவிர ரசிகர்களாக இருப்பர். பொதுவாக இப்படிப்பட்டவர்களின் கணினி வன்தட்டுக்கள், கைபேசிகள், ஏனைய பொழுது போக்கு சாதனங்களை இசைக் கோப்புக்களே (music files) பெரிதும் ஆக்கிரமித்திருக்கும். நீங்களும் இப்படியான ஒரு இசைப் பைத்தியம் என்றால் இந்தப் பதிவுஉங்களுக்காகவே.. என்ன

நீங்கள் அப்படியில்லையா?? உடனே வேறொரு பதிவை தேடுங்கள்...
வரம்பின்றி தரவுகளை சேமித்து வைக்க அதிலும் குறிப்பாக இசைக் கோப்புக்களை சேகரித்து வைக்க கணினியே சிறந்த சாதனமென்ற அடிப்படையிலும் அதுவே இலகு என்றகாரணத்தாலும் கையில்படுகின்ற எல்லா இசைக் கோப்புக்களையும் அடுக்கிவைத்திருப்போம். ஆனாலும் இது ஒரு எல்லையை தாண்டுகின்ற போது அவற்றை நிர்வகிப்பது சிரமமாவதுடன், பாடல்களை தேடியெடுப்பது பெரும் தலையிடியாகிவிடும். உங்களிடம் இருக்கின்ற பாடல்கள் உங்களுக்கே மறந்துவிடும். ஆகவே இப்படிப்பட்ட தொல்லைகளால் கஷ்டப்படுகிற உங்களுக்கு உதவுகின்ற இலவச

மென்பொருள்தான் Media Monkey.

முதலில் கீழுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் இதனை திறந்து கொள்ளுங்கள் முதல் படிமுறையாக உங்கள் Music Database இனை இதற்க்குள் உட்செலுத்த (Import) வேண்டும். அதாவது உங்கள் இசைக் கோப்புகளுக்கான பிரதான் Folderஇனை தெரிவு செய்து Import செய்யுங்கள். பின் Music என்ற பகுதியில் உங்கள் பாடல்கள் Album, Artist, Title என்ற வகைகளில் காட்சிப்படுத்தப்படும்.
#‎இதிலிருந்தே‬ பாடலை தெளிவான தரத்தில் கேட்க முடியும். அத்தோடு மேம்படுத்தப்பட்ட Equalizer காணப்படுகிறது.‪#‎பாடலின்‬ Properties இலகுவாக மாற்ற முடியும்.
‪#‎Playback‬ இன் போது Cross fade வசதி.
‪#‎Audio‬ CDகளை இதிலிருந்தே RIP செய்து Libraryயில் Add செய்யலாம்.
‪#‎Playlist‬ இனை தானாகவே உருவாக்கின்ற வசதி.
‪#‎DJ‬ Mode போன்ற இசைப்பிரியர்களுக்கு பயன் தருகின்ற பல வசதிகள்.
Media Monkey மென்பொருள் Ventis Media நிறுவனத்தினால் வினியோகிக்கப்படுவதுடன் இது Gold version மற்றும் Free versionஎன்ற இரண்டு வகையான பதிப்புகளில் காணப்படுகிறது. இரண்டு பதிப்புக்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகளில்லை. சாதாரணமாக Free version மட்டுமே சாதாரணபயன்பாட்டுக்கு போதுமானது. அதற்கான இணைப்பை தந்திருக்கின்றேன். மற்றைய பதிப்பு பணம் செலுத்தி பெற வேண்டும்.
அனுபவங்களை பி்ன்னூட்டங்களாக பகிருங்கள்...

தரவிறக்க சுட்டி :- 

சில குறிப்பிட்ட SOFTWAREரை பிறர் பயன்படுத்தாமல் செய்ய

கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.
சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர்.
அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள்Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.
ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து (password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தமுடியும்.

இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்துவிட வேண்டும். பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த
மென்பொருளை தடை செய்கிறிர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால் (Drag and drop) கூட போதும். இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை.(No installation) அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.

WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?


photo_1416227070_temp.jpg.pagespeed.ce.fw_bNcmNa0
சமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் பலரையும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.
நான் அனுப்புன மெசேஜ் பார்த்த அப்புறமும் ரிப்ளே பண்ணல நீ!
என பல மனைவிகள், காதலிகள், முதலாளிகள் கேட்கத் துவங்கி விட்டனர்.
எனவே., ஒரு புதிய வழியின் மூலம் android கைபேசி வைத்திருப்போர் தாங்கள் செய்தியை பார்த்திருந்தாலும் , அனுப்பியவருக்கு நீல நிற குறிகள் தெரியாமல் செய்யல்லாம்.
படி க (1) – உங்கள் கைபேசியில் குறைந்தது android 2.1 அல்லது புதிய android இருக்க வேண்டும்.
படி உ (2) – Settings > Security > ‘Download from Unknown Sources’ என்பதை தேர்வு செய்யவும்.
படி ங (3) – www.whatsapp.com/Android/ என்ற முகவரியில் இருந்து APK கோப்பை தரவிறக்கி நிறுவ வேண்டும்.
படி ச (4) – இப்பொது WhatsApp ஐ திறந்து “Settings > Account > Privacy” என்பதில் “Read Receipts” எனும் தேர்வை நீக்க வேண்டும்.
1. உங்களுக்கு வந்த செய்திக்கான நீல நிற குறி எப்படி அனுப்பியவருக்கு தெரியாதோ.,
2. அதே மாதிரி., நீங்கள் அனுப்பிய செய்தியை மற்றவர் படித்தாரா எனும் நீல நிற குறி நீங்கள் அனுப்பிய செய்திகளுக்கும் இனி தெரியாது.
3. ஆனால் நீங்கள் Group Message செய்தீர்கள் என்றால் அதில் அனுப்பியவருக்கு நீல நிறக் குறி தெரியும்.

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.
இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள்.
இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை  போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.
100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.
பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.
விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.